காட்டில் ரஜினி சமாளித்தது எப்படி

சென்னை : பியர் கிரில்ஸூடனான நடிகர் ரஜினி பங்கேற்ற சாகக நிகழ்ச்சி டி.வி.யில் ஒளிபரப்பானது.
இன்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் 'டிஸ்கவரி' சேனலில், நடிகர் ரஜினி பங்கேற்றார். கர்நாடகாவில் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்டது.


இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பியர்ஸ் கிரில்ஸூடன் ரஜினி காட்டில் சாகச பயணம் செய்தார். பல அடி உயரமுள்ள மலை மீது ரஜினி கயிறு மூலம் ஏறிய போது கையில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அப்போது உங்களுடைய வயது என்ன என்று பியர் கிரில்ஸ் கேட்டார், எனக்கு வயது 70 என்று ரஜினி கூறவே. அதற்கு இந்த வயதிலும் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்றார்.பியர் கிரில்ஸ். , ஸ்டைலாக கண்ணாடியை அணிய முயற்சித்தார் பியர் கிரில்ஸ். பின்னர் அவருக்கு ரஜினி, ஸ்டைலாக கண்ணாடி அணிந்து செய்து காட்டினார்.