சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ஜெனிவா: கொரோனா பாதிப்பை, சீனா தீவிரமான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தியுள்ளதால், உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.


சீனாவின் வூகான் நகரில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக, கொரோனா என்ற கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நோய் வேகமாக பரவியதால், வூகான் நகரை தனிமைப்படுத்தியது. 10 நாட்களில் பெரிய மருத்துவமனையை கட்டி முடித்து, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தது. அந்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை, வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லலை.
இதனால் படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, கொரோனாவுக்கு எதிராக வெற்றிபெற்றது. கடந்த 4 நாட்களில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆகையால் சீனாவின் தீவிரமான இந்நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு பாரட்டியுள்ளது.